News February 27, 2025

கும்பமேளா நிறைவு: ஒரேநாளில் 1.4 கோடி பேர் நீராடல்

image

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணிசங்கமத்தில் 45 நாள்களாக நடைபெற்ற மகா கும்பமேளா, மகாசிவராத்திரியான இன்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று மட்டும் 1.4 கோடி பேர் திரிவேணிசங்கமத்தில் புனித நீராடினர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 66.21 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்தத் தகவலை பகிர்ந்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுவொரு உலக வரலாறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 27, 2025

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணி அபாரம்

image

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் 127/9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது வெற்றிபெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தனர்.

News February 27, 2025

மகா கும்பமேளா: மம்தா பானர்ஜி சந்தேகம்

image

144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மகா கும்பமேளா 2025இல் கொண்டாடுவதன் துல்லியத் தன்மை குறித்து நிபுணர்கள் சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2013இல் கும்பமேளா நடைபெற்ற நிலையில் தற்போது மகா கும்பமேளா நடத்தப்படுவது சரியானதா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 191
▶குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
▶பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

error: Content is protected !!