News March 18, 2024
குமரி எஸ்பி முக்கிய அறிவிப்பு

குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என குமரி எஸ்பி தெரிவித்துள்ளார். இதற்காக, எஸ்பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் மொபைல் எண்ணை(70103 63173) தொடர்புகொள்ளலாம் என எஸ்பி சுந்தரவதனம் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 14, 2025
குமரி: 1450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது – எஸ்.பி.

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் மாவட்டத்தில் 1450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று(ஆக.13) தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
நாகர்கோவில்-கோட்டயம் ரயிலில் கூடுதலாக 2 முன்பதிவு பெட்டிகள்

நாகர்கோவில் – கோட்டயம் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்(16366) நாளை முதல் கூடுதலாக 2 முன்பதிவு இருக்கை பெட்டிகளுடனும், திருவனந்தபுரம் – நாகர் கோவில்(56308) ரெயில் 17ந்தேதி முதல் கூடுதலாக 2 பெட்டிகள் முன்பதிவு இருக்கை பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என திருவனந்தபுரம் தெற்கு ரெயில்வே கோட்ட தலைமை அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
News August 14, 2025
குஞ்சன் விளையில் 26 மது பாட்டில்கள் சிக்கியது

சுசீந்திரம் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் குஞ்சன் விளை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைக்கத் தகவலின் பெயரில் நேற்று அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது லிங்கபிரபு என்பவர் 26 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளார்.