News April 9, 2025

குமரி அனந்தனின் நிறைவேறாத ஆசைகள்

image

நதிநீர் இணைப்பு, மது ஒழிப்பு ஆகியவை குமரி அனந்தனின் நீண்டநாள் கோரிக்கைகள். இதற்காக குமரி-சென்னைக்கு பல முறை அவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் பேசும்போதும் தனது விருப்பத்தை அவர் முன்வைக்க தவறியதே இல்லை. ஆனால் அவரது ஆசைகள் கடைசி வரை நிறைவேறவே இல்லை. குமரி அனந்தன் மறைந்தாலும், அவர் மேற்கொண்ட பாத யாத்திரைகள் என்றும் தமிழக வரலாற்றில் அவருக்கு புகழை பெற்றுத் தரும்.

Similar News

News November 23, 2025

10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

News November 23, 2025

உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

image

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 23, 2025

வரலாற்றில் இன்று

image

*1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.
*1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
*2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

error: Content is protected !!