News April 9, 2025
தமிழுக்காக குரல் கொடுத்தவர் குமரி அனந்தன்

இலக்கியச் செல்வர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் மறைந்த குமரி அனந்தன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர் 5 முறை எம்.எல்.ஏ.ஆகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையை பெற்றுத் தந்தவர் குமரி அனந்தன். 2024-ம் ஆண்டு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Similar News
News April 17, 2025
ஸ்ரீக்கு காதுக்குள் குரல் கேட்கும் மனநோய்.. நண்பர்கள் தகவல்

நடிகர் ஸ்ரீ, சிசோபெர்னியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ, ஹரியானாவில் இருப்பதாகவும், அவரை மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். சிசோபெர்னியா என்பது யாரோ காதுக்குள் பேசுவது போல இருக்கும் ஒருவித மனநோய். இந்த நோய் குறித்து நீங்கள் கேள்விப்பட்டு உள்ளீர்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
News April 17, 2025
மத்திய அரசில் 400 பணியிடங்கள்: ₹56,100 சம்பளம்

மத்திய அரசின் Nuclear Power Corporation of India Limited-ல் இருக்கும் 400 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. சிவில், மெக்கானிக்கல் Engg. படித்து, 26 – 31 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். மாதச் சம்பளம் ₹56,100 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. முழு தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
News April 17, 2025
எத்தனை என்கவுன்ட்டர்கள்? ஹைகோர்ட் கிளை கேள்வி

சமீபத்தில் எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன என்று காவல்துறைக்கு ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கோர்ட், காவல்துறையினரின் பாதுகாப்புக்குதான் துப்பாக்கி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், சுடுவதற்கு அல்ல என்றும் தெரிவித்தது. குற்றவாளிகளை காலுக்கு கீழேதான் சுட வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோர்ட் அறிவுறுத்தியது.