News September 7, 2025

ஸ்பெயின் வீரரை எளிதாக காலி செய்த குகேஷ்

image

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் FIDE Grand Swiss செஸ் தொடரின் 3-ம் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றார். கருப்பு நிறக்காயுடன் களமிறங்கிய குகேஷ், ஸ்பெயின் டேனில் யுஃபாவை எளிதாக வீழ்த்தினார். .மறுபுறம் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி, ஆஸ்திரிய வீராங்கனை ஆல்கா படெல்காவை 3-வது சுற்றில் வீழ்த்தி முன்னிலைப் பெற்றார்.

Similar News

News September 7, 2025

இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.. ரெடியா!

image

வானியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ரத்த நிலவை காண ரெடியாக இருங்கள். இன்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி பயணிப்பதால், செந்நிற ஒளியில் நிலா காட்சியளிக்கும். இரவு 8:58-க்கு தொடங்கும் கிரகணம், நள்ளிரவு 1:26 வரை நிகழ உள்ளது. ஆனால், இரவு 11:42-க்கு ரத்த நிலவு முழுமையாக பிரகாசிக்கும். மொட்டை மாடியில் நின்று வெறும் கண்களால்கூட இதனை காணலாம். நீங்க ரெடியா!

News September 7, 2025

கில்லுக்காக ரோஹித்தை ஓரங்கட்ட முடிவு?

image

வரும் அக்டோபரில் நடைபெற உள்ள AUS-க்கு எதிரான 3 ODI போட்டிகள் தான், ரோஹித் கேப்டனாக இருக்கும் கடைசி போட்டிகள் என கூறப்படுகிறது. அந்த தொடரை அடுத்து, சுப்மன் கில்லுக்கு ODI கேப்டன் பதவி வழங்கப்படலாம் என BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2027 ODI உலகக்கோப்பை வரை, ரோஹித்தின் ஃபார்ம், வயது முதிர்வு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 7, 2025

₹200 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா’

image

இந்தியாவின் முதல் ‘Super Women’ படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’, விரைவில் ₹200 கோடி வசூலை எட்ட உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹175+ கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹30 கோடி பட்ஜெட்டில் துல்கர் சல்மான் தயாரித்த இப்படத்தை, டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

error: Content is protected !!