News February 16, 2025
₹25 கோடி வசூலித்த ‘குடும்பஸ்தன்’

மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ₹25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிடில் கிளாஸ் நபரின் வாழ்க்கையை, நகைச்சுவையாக சித்தரித்து ரிலீஸான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ள நிலையில், வரும் 28ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. குட் நைட், லவ்வர் பட வரிசையில் மணிகண்டனுக்கு இது 3ஆவது வெற்றிப்படமாகும்.
Similar News
News September 18, 2025
GBU விவகாரம்: இளையராஜா பதிலளிக்க உத்தரவு

இளையராஜா தாக்கல் செய்த காப்பிரைட் மனு காரணமாக, Netflix தளத்திலிருந்து ‘குட் பேட் அக்லி’ படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இனி படத்தில் மாற்றங்கள் செய்தால் மீண்டும் சென்சார் போர்டில் அனுமதி பெற வேண்டும் என்றும் சென்னை HC-ல் பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இதனையடுத்து, இதற்கு இளையராஜா பதிலளிக்க கூறி, செப்.24-க்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
ஆன்லைன் கேமிங்கால் பறிபோன சிறுவனின் உயிர்

ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர், சொந்த நிலத்தை விற்று ₹14 லட்சத்தை அக்கவுண்டில் வைத்திருந்தார். இந்நிலையில், அவரது 13 வயது மகன் ஆன்லைன் கேம் விளையாடி முழு பணத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. அக்கவுண்டில் பணத்தை காணவில்லை என தந்தை வங்கியில் புகார் அளிக்க, அச்சிறுவன் பயத்தில் விபரீத முடிவெடுத்துள்ளான்.
News September 18, 2025
நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மீது தவறில்லை: ஐசிசி

நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மீது தவறில்லை என ஐசிசி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்கு, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மீது நடவடிக்கை எடுக்க பாக். கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக UAE-க்கு எதிரான போட்டியில் விளையாடுவதை அந்த அணி ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியது. பாக்.கோரிக்கையை மறுத்துள்ள ஐசிசி, குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என கூறியுள்ளது.