News April 30, 2024
குரு பெயர்ச்சியிலிருந்து இந்த ராசிகளுக்கு குபேர யோகம்

ஜோதிட பஞ்சாங்கத்தின்படி நாளை குரு பெயர்ச்சி நடக்கிறது. இதனால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு குபேர ராஜயோகம் காத்திருக்கிறது. குறிப்பாக, மேஷ ராசியினருக்கு வீடு, வாகனம், வேலை என செல்வம் வந்து சேரும். கடக ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த கண்டங்கள் விலகி ஓடும். சிம்ம ராசியினர் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்க உள்ளனர். கன்னி ராசியினருக்கு நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சி பொங்கும்.
Similar News
News March 4, 2026
வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்!

இஸ்ரேல், US தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்கி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு மீன்பிடி வேலைக்கு சென்ற தமிழக மீனவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அடிக்கடி குண்டு சத்தம், உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாக கூறியுள்ள அவர்கள், இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப PM மோடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 4, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 4, 2026
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

காங்கிரஸுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் போராடி வருகிறது. <<19287048>>ப.சிதம்பரம், ஸ்டாலின் சந்திப்பை அடுத்து<<>> தொகுதி பங்கீடு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தை தொடரும் என கூறியது திமுக – காங்., உறவில் விரிசல் உள்ளதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


