News July 5, 2024
பேய் படத்தில் நடிக்கும் கே எஸ் ரவிக்குமார்

‘யூ ஆர் நெக்ஸ்ட்’ என்ற பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.டி., துறையில் பணியாற்றும் இளைஞர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை அமானுஷ்ய கதைக்கள பின்னணியில் இப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இதில் உதயா, ஜனனி, திவ்யா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்
Similar News
News September 22, 2025
இந்த நாடுகள்தான் பெஸ்ட்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான உணவுகள் கிடைக்கும். அதில், சில நாடுகளின் உணவுகள் சுவை மிக்கவையாக உள்ளன. அந்த வகையில், உலகில் சுவையான உணவு கிடைக்கும் நாடுகள் எது என்று மேலே கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் நாடுகள் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கான புதிய அப்டேட் இது: www.ungaludanstalin.tn.gov.in இணையதளத்திற்கு சென்று Track Grievance-ஐ கிளிக் செய்யவும். புதிய பயனர் என்றால் New User? Signup பகுதியில் பெயர், செல்போன் எண் பதிவிட்டு ID-யை உருவாக்கவும். ஏற்கெனவே பதிவு செய்தவர் எனில், உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு உள்ளே நுழைந்து, தங்களது விண்ணப்ப நிலையை அறியலாம். SHARE பண்ணுங்க.
News September 22, 2025
பாக்., வீரரின் மனைவிக்கு பாடம் புகட்டிய இந்திய ரசிகர்கள்

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை வீழ்த்தியதாக பாக்., கூறுவதை, ‘6- 0’ என்ற சைகைகளால் வெளிப்படுத்தினார் பவுலர் ஹாரிஸ் ராஃப். இந்நிலையில், ‘நாங்கள் விளையாட்டில் தோல்வியுற்றோம், ஆனால் போரில் வென்றோம்’ என அவரது மனைவி முஜ்னா மசூத் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், விளையாட்டு, போர் என எதிலும் இந்தியாவே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.