News April 27, 2024
மீண்டும் தந்தையானார் க்ருணால் பாண்டியா!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் க்ருணால் பாண்டியா – பன்குரி தம்பதிக்கு 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் கபீர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஏப்.21ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு, ‘வயு க்ருணால் பாண்டியா’ என பெயரிட்டுள்ளனர். மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை க்ருணால் பாண்டியா தனது இன்ஸ்டாவில் பகிர வாழ்த்துகள் குவிகிறது.
Similar News
News April 9, 2026
போர் விளைவு.. தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவிலேயே நீடிக்கிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 40 டாலர்கள் சரிந்து 4,710 டாலர்களுக்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மீண்டும் தொற்றிக் கொண்டதால் மேற்கு ஆசிய நாடுகளில் பலரும் தங்கத்தை விற்பனை செய்து வருவதே மீண்டும் இந்த விலைச் சரிவுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.
News April 9, 2026
₹10 கோடி முதலீட்டில் ₹100 கோடி லாபம் பார்த்த மீனா.. எப்படி?

நிலம், தங்கத்தில் முதலீடு செய்வதே தற்போதைய சிறந்த முதலீடு என்பதற்கு மீனா மிகப்பெரிய சாட்சியாக மாறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் பெற்று ₹10 கோடி மதிப்பில் சென்னையில் ஒரு கலைநயமிக்க பங்களா கட்டியுள்ளார். இந்நிலையில், USA-வைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வீட்டை ₹100 கோடிக்கு மீனா விற்றுள்ளாராம். நவீன கட்டிடங்களின் நடுவில் பழமையான கலை நயத்துடன் கூடிய வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
News April 9, 2026
ஜெ.குரு பாமக திமுகவுக்கு ஆதரவு.. அன்புமணிக்கு ஷாக்!

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளது. அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்த குருவின் மகள் விருதாம்பிகை திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணியிடம் இருந்து தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், அவர் தனது தந்தைக்கு செய்த துரோகம் காரணமாக அங்குச் செல்ல மனமில்லை என கூறினார்.


