News October 4, 2025
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!

கரூர் துயர சம்பவம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, விஜய் மீது ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டக் கூடாது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் வீட்டிலேயே முடங்கிவிடாமல் வெளியே வரவேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News October 4, 2025
தவெக தார்மிக பொறுப்பேற்க வேண்டும்: TTV தினகரன்

கரூர் துயரத்திற்கு தவெக தார்மிக பொறுப்பை ஏற்க வேண்டும் என TTV தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பொறுப்பற்றது எனவும், கரூர் துயரத்தில் சதி இருப்பதாக அண்ணாமலை கூறியது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க பாஜக ஏன் குழு அமைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 4, 2025
இதனால் தான் கில் ODI கேப்டன் ஆனார்..!

ரோஹித் சர்மாவை இந்திய ODI அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது சர்ச்சையான நிலையில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு அணியை தயார்படுத்தவே ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 3 வகையிலான போட்டிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அகர்கர் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
கரூர் துயரத்திற்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும்: சீமான்

கரூர் துயரத்தில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பழி போடுவது, உயிரிழப்பை விட கொடுமையாக உள்ளதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார். விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிப்பதாகவும், விஜய்க்கு அண்ணாமலை பாதுகாப்பு கொடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் கரூருக்கு வந்ததால் தான் அந்த கூட்டம், எனவே அந்த சம்பவத்திற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.