News August 20, 2025
திருமா கருத்துக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாகக் கூடாது என்ற திருமாவளவன் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை ஆதரிப்பது தவறு என்றும், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது என்று சொல்வது அதிமேதாவித்தனம், அற்பத்தனம், அரைவேக்காடு தனம், கொத்தடிமையிலும் கொத்தடிமைத்தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
GST வரியில் மாற்றம்.. இன்று முக்கிய முடிவு

GST தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார். வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு குறைந்த வரி விதிப்பு முறை இந்த ஆண்டு தீபாவளிக்குள் கொண்டு வரப்படும் என PM <<17409932>>மோடி <<>>சமீபத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளன. இதனால், பல பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News August 20, 2025
திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதி காலமானார்

300 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதியான மகாமுனிவர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) முக்தி அடைந்தார். ‘கயிலை மாமுனிவர்’ என போற்றப்படும் இவர், ஆன்மிகம், சைவ சித்தாந்தம், தமிழ், கல்வி, சமூகப் பணியில் ஆற்றிய சேவை என்றும் அழியாது, தலைமுறைகளாக வாழ்வில் ஒளியாக நிலைத்திருக்கும். அவரது மறைவிற்கு அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News August 20, 2025
வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை.. தவெக பேனர்

விஜயகாந்தை மானசீக குருவாக ஏற்றால் அவரது போட்டோவை தவெக பயன்படுத்த அனுமதிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை இழந்துவிட மாட்டோம்’ என்ற வாசகம் அடங்கிய பேனர் மதுரை தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, <<17459105>>அண்ணா, MGR<<>> போட்டோக்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், விஜயகாந்த் போட்டோ இடம்பெற்றது பேசுபொருளாகியுள்ளது.