News March 20, 2024
தனிச்சின்னத்தில் போட்டி என கிருஷ்ணசாமி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை எதிர்த்து போட்டியிட உள்ளார். 2019 தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரிடம் 1,20,767 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 24, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

இன்னும் 2 நாள்களில் புயல் உருவாக உள்ளதால், டெல்டா & தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து அந்தந்த கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழை பெய்து வருவதால் மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 24, 2025
நம்பித்தானே கொடுத்தேன்: கோபமான தோனி

2019 IPL-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், டெத் ஓவர் CSK வீரர் தீபக் சாஹரிடம் கொடுக்கப்பட்டது. முதல் 2 பந்துகள் no ball ஆனது. இதனால், ‘நீ முட்டாள் இல்லை, நான் தான் முட்டாள், உன்னை நம்பித்தானே பந்தை கொடுத்தேன்’ என்று தோனி திட்டியதாக சாஹர் நினைவுகூர்ந்துள்ளார். இதனையடுத்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்த சாஹர், 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் CSK-வும் வென்றது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா?

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
*மன அழுத்தம் குறையும்.
*ரத்த ஓட்டம் சீராகும்.
*தலைவலி குறையும்.
*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.
*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.
உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.


