News March 16, 2024
கிருஷ்ணகிரி: வழிப்பறி, திருட்டு வழக்கில் மூவர் கைது

சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) வேலம்பட்டி வைரக், பட்டக்கப்பட்டி ஜனா, கொள்ளஹள்ளி திவாகர் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 4, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 4, 2025
கிருஷ்ணகிரி: சென்னை ஐகோர்ட்டில் சூப்பர் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் படித்த 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 4, 2025
கிருஷ்ணகிரி: EB பிரச்சனையா..? உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <


