News August 4, 2024
கோழிக்கோடு மாநகராட்சி ₹3 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்காக, கோழிக்கோடு மாநகராட்சி ₹3 கோடி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29இல் நிகழ்ந்த நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கல் உள்பட 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹3 கோடி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
விஜயகாந்தின் வலதுகரம் கட்சியிலிருந்து விடைபெற்றார்

தேமுதிக செய்தித் தொடர்பாளர் மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதலே அவருடன் பயணம் செய்து வந்த அவர் பிரேமலதாவுக்கும் பக்க பலமாக இருந்து வந்தார். தேமுதிகவில் 3 முறை தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு இம்முறை சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் வலது கரமே கட்சியிலிருந்து விடைபெற்றதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News April 8, 2026
CSK-வுக்கு திரும்பினார் நட்சத்திர வீரர்

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் CSK தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 11-ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதை CSK வீரர் பிரேவிஸ் உறுதி செய்துள்ளார். இடுப்பு வலி காரணமாக CSK-வின் முதல் மூன்று போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. தற்போது அவரது வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 8, 2026
மத்தியஸ்தம் செய்தது பாகிஸ்தான் இல்லையா?

போர் நிறுத்தத்துக்கு பாக்., மத்தியஸ்தம் செய்தது இந்திய அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. இந்த மத்தியஸ்தத்தில் சீனாவும் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த அறிவிப்புக்கு சில மணிநேரங்கள் முன்புகூட சீன வெளியுறவு அதிகாரிகள் ஈரான் அரசுடன் பேசியதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. முன்னதாக, ஹார்முஸ் நீரிணை தொடர்பான ஐநாவின் ஒரு தீர்மானத்தை ஒருதலைபட்சமானது என சீனா கூறியிருந்தது.


