News April 6, 2024
மகளின் ஆசையை நிறைவேற்றிய கொட்டாச்சி!

மகளின் ஆசையை நிறைவேற்றியது குறித்து நடிகர் கொட்டாச்சி நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர், ‘என் பொண்ணு மானசாவுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எங்க வசதிக்கும் மீறி லோன் வாங்கித்தான் இந்த காரை வாங்க முடிஞ்சது. என் பொண்ணோட சந்தோஷம் முக்கியம். அவளோட ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷப்படுத்தும் போது, என் அப்பா, அம்மாவையே சந்தோஷப்படுத்துற மாதிரி ஃபீல் வருது’ என்றார்.
Similar News
News March 17, 2026
இனி தமிழ்நாடு இவர்கள் கண்ட்ரோலில் இருக்கும்!

TN தேர்தலுக்காக நாளைமுதல் கண்காணிப்பு பணிகளை ECI தொடங்க உள்ளது. இதற்காக 327 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தையும் நேரடியாக கண்காணிப்பார்கள். வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள், சட்டம்-ஒழுங்கு & பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றையும் கண்காணிப்பார்கள். இனி ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவர்கள் கண்காணிப்பில் தான் இருக்கும்.
News March 17, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது UPDATE

ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்று கிடைக்கும் என ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழு பார்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விரைவில் சென்சார் சான்று கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மே மாதத்தில்தான் படம் ரிலீஸாகும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும்.
News March 17, 2026
இனி முட்டைகளில் Expiry date சீல்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் முட்டைகளில் Expiry date சீல் இருக்க வேண்டும் என உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. கஸ்டமர்கள் ஏமாறுவதை தவிர்க்கவும், உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. சாதாரணமாக முட்டைகள் 2 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்; ஆனால் 30°C-க்கும் குறைவான வெப்பநிலையில் சேமித்தால் 5 வாரங்கள் வரை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.


