News May 12, 2024
முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற கொல்கத்தா

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை மும்பைக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனையை அந்த அணி படைத்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Similar News
News November 18, 2025
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைளை நிறைவேற்றுக: தவெக

<<18316826>>வேலை நிறுத்த போராட்டத்தில்<<>> ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளை TN அரசு நிறைவேற்ற வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அரியணை ஏறிய திமுக, தற்போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தல் விடுப்பதாக தவெக சாடியுள்ளது. மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆதரித்ததாகவும் தவெக குறிப்பிட்டுள்ளது.

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.