News May 6, 2024
முதல் இடத்தைப் பிடித்தது கொல்கத்தா

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது கொல்கத்தா அணி. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஒரே புள்ளிகள் (16) பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் KKR முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் KKR அணியை விட RR ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளது. மூன்றாவது இடத்தில் CSK, 4- SRH, 5-LSG, 6-DC, 7-RCB, 8-PBKS, 9-GT, 10-MI அணிகள் உள்ளன.
Similar News
News March 13, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 13, மாசி 29 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 13, 2026
அதிமுகவிடம் 10 இடங்களை கேட்கும் ஜான் பாண்டியன்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்கும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு விஜய் வருவார் என்பது வதந்தி என்றும் அவர் தங்கள் கூட்டணிக்கு உறுதியாக வரமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
மார்ச் 13: வரலாற்றில் இன்று

*1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. *2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சுக்கு 1,000-ஐ தாண்டியது. *1980 – இந்திய அரசியல்வாதி வருண் காந்தி பிறந்த தினம். *1982 – இசையமைப்பாளர் தர்புகா சிவா பிறந்த தினம். *1994 – இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பிறந்த தினம் *2015 – தமிழ் எழுத்தாளர் தி.சு.கிள்ளிவளவன் நினைவு தினம்.


