News May 3, 2024

கொல்கத்தா அணி தடுமாற்றம்

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது. பில் சால்ட் 5 ரன், சுனில் நரேன் 8, ரகுவன்சி 13, ஸ்ரேயஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்றுமுன்பு வரை, 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.

Similar News

News September 22, 2025

நண்பர்களுக்கு கடன் கொடுப்பீர்களா?

image

நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுத்தவர்களில் 73% பேருக்கு, பணம் திரும்ப வருவதில்லை என்கின்றது லெண்டிங் ட்ரீ நிறுவனத்தின் சர்வே. அதுமட்டுமல்ல, இதனால் உறவு பாதிக்கப்படுவதாக 25% பேரும், ஏன் கொடுத்தோம் என வருந்துவதாக 43% பேரும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும், எந்த பிணையமோ, ஒப்பந்தமோ, நிபந்தனையோ இல்லாமல் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. பின் இதுவே பிரச்னைக்கு காரணமாகிறது. உங்க அனுபவம் எப்படி?

News September 22, 2025

அமெரிக்காவின் H-1B-க்கு போட்டியாக சீனாவின் ‘K விசா’

image

உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களை தங்கள் நாட்டில் பணியாற்ற ஈர்க்கும் வகையில் சீனா K விசாவை அறிமுகம் செய்கிறது. அக்.1 முதல் அமலுக்கு வரும் இந்த விசா அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் & கணிதம் (STEM) துறைகளை சார்ந்தவர்களுக்கு பொருந்தும். அண்மையில் H-1B விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்கா ₹88 லட்சமாக உயர்த்திய நிலையில், சீனாவின் அறிவிப்பு இதற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.

News September 22, 2025

அரசியல் படமாக வரும் சார்பட்டா – 2

image

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைக்கு இப்படம் வரவில்லை என்ற பலர் வேதனைப்பட்ட நிலையில், சார்பட்டா – 2 குறித்த அப்டேட்டை ரஞ்சித் கொடுத்துள்ளார். கதை ரெடியாகிவிட்டதாகவும், சில மாறுதல்களை மேற்கொண்டு விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான அரசியல் காலகட்டத்தை இப்படம் பேசுகிறதாம்.

error: Content is protected !!