News March 27, 2025

முதல் வெற்றியை முத்தமிட்ட கொல்கத்தா அணி!

image

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை கொல்கத்தா பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர்கள் யாரும் பெரியளவில் ரன் அடிக்கவில்லை. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நிதானமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 97* ரன்கள் விளாச, அந்த அணி எளிதில் வென்றது.

Similar News

News March 30, 2025

உயிரிழப்பு 1,644 ஆக உயர்வு

image

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஆக இருக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், சாலைகள், பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

News March 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 221 ▶குறள்: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. ▶பொருள்: இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

News March 30, 2025

DOGEலிருந்து வெளியேறும் மஸ்க்?

image

அமெரிக்க அரசின் வீண் செலவினங்களை, 130 நாள்களுக்குள், நாளொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைக்க செயல்திட்டம் தீட்டி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். இதன்மூலம், USA அரசு பொறுப்பில் (DOGE) இருந்து வரும் மே மாதம் எலான் மஸ்க் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களை நீக்குவது உள்பட அவரது செயல்பாட்டிற்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!