News April 26, 2024
கொல்கத்தா அணி பேட்டிங்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள KKR அணி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. இதேபோல, 8 போட்டிகளில் விளையாடிய PBKS அணி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
Similar News
News March 11, 2026
சீன நிறுவனங்களின் முதலீடு.. விதிகளை தளர்த்திய இந்தியா

அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளை மத்திய அரசு திருத்தி அமைக்க உள்ளது. கல்வான் மோதலுக்கு பின் சீனா உள்பட எல்லை நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது மத்திய அரசு அந்த விதிகளை தளர்த்தினால் இனி அந்த நாடுகளிலிருந்து முதலீடுகள் எளிதாக வரும். இது வர்த்தக உறவுகளை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.
News March 11, 2026
ராசி பலன்கள் (11.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 11, 2026
வாயால் பறிபோன ₹25 லட்சம் தங்க நகைகள்!

எங்கு, எதை பேச வேண்டும் என்பதை அறிவது அவசியம். 3 நாள்கள் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தினர், நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ந்துள்ளனர். Cab-ல் செல்லும் போது, நகை இருந்த அலமாரி பற்றி அவர்கள் பேசிக் கொண்டே சென்றுள்ளனர். இதனை கவனித்த Cab டிரைவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். பிறகு போலீசார் விசாரித்து ₹25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டுள்ளனர்.


