News May 3, 2024

கொல்கத்தா அணி ஆல் அவுட்

image

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய துஷாரா 3, பும்ரா 3, பாண்டியா 2, பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 70, மனிஷ் பாண்டே 42 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து MI அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

காஞ்சிபுரத்தில் உடல் நசுங்கி கோர பலி!

image

வாலாஜாபாத் தாலுகா. தென்னேரி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(65). விவசாயியான இவர், தனது பைக்கில் வாலாஜாபாத் சென்று விட்டு மஞ்சமேடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரகடம் சாலையில் உள்ள சேர்க்காடு பகுதியில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில், லாரியி சக்கரத்தில் சிக்கிய மோகன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

பாஜகவில் நயினாருக்கே தெரியாமல் இது நடக்குதா?

image

தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என <<19115944>>நயினார்<<>> கூறியுள்ளார். ஆனால் 2 தினங்களுக்கு முன்னர்தான் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் <<19093944>>எல்.முருகன்<<>> கூறியிருந்தார். இதனால், பாஜகவில் மாநில தலைவருக்கு தெரியாமல், அமைச்சர் கட்சி பணிகளை செய்துவருகிறாரா எனவும், பாஜகவில் ஏன் இந்த குழப்பம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News February 12, 2026

3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

image

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்க்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!