News August 13, 2024
கொல்கத்தா மருத்துவமனை டீன் ராஜிநாமா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இறந்துபோன மருத்துவரும் தனது மகளை போன்றவர்தான் என்ற அவர், ஒரு பெற்றோராக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் 4ஆவது நாளாக கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Similar News
News March 10, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது.. இன்ப அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $10(₹918) குறைந்துள்ளது. இதனால், 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் விலை தற்போது $85- $90 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பேசிய நிலையில், இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு நீங்குவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் சற்று தணிந்துள்ளது.
News March 10, 2026
பாஜகவின் வக்கிரமான அரசியல்: நாஞ்சில் சம்பத்

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அதை விஜய் எதிர்கொள்வார் எனக் கூறிய அவர், தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக இருப்பதாகவும், அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு அவசர ஆலோசனை

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்றிரவு அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். TN-ல் கையிருப்பில் உள்ள வீட்டு உபயோக, வணிக சிலிண்டர்களின் விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகரீதியான கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு என ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


