News April 12, 2025
சோகத்தில் வாடிப்போன கோலி

சொந்த மண்ணில் டெல்லியிடம் தோல்வி அடைந்தது RCB வீரர்களை ரொம்ப அப்செட் ஆக்கிவிட்டது. குறிப்பாக டிரெஸ்ஸில் ரூமில் அமர்ந்திருந்த விராட் கோலியின் முகத்தை பாருங்கள். சோகத்தை வெளிப்படுத்தும் இந்த போட்டோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரல். நேற்று நடந்த மேட்சில், தன் அதிரடியால் K.L.ராகுல் வெற்றியை பறித்துவிட்டார் என்று சொல்லலாம். நீங்கள் அந்த போட்டியை பார்த்தீர்களா? எப்படி இருந்தது?
Similar News
News December 3, 2025
தாமதமின்றி SIR படிவங்களை சமர்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளைக்குள் SIR படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் டிச.11 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனையடுத்து கடைசி நாள் வரை காத்திருக்காமல் படிவங்களை பூர்த்தி செய்து BLOகளிடம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
ரெட் அலர்ட்.. நாளை பள்ளிகள் விடுமுறையா?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால், வட சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழை எச்சரிக்கையால் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை நீடிப்பதால் நாளை விடுமுறை விட வாய்ப்புள்ளது.
News December 3, 2025
டி20 அணியில் இணைந்த சுப்மன் கில்

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான அணியில் கில், அபிஷேக், திலக், ஹர்திக், துபே, அக்சர், ஜிதேஷ், சஞ்சு, பும்ரா, வருண், அர்ஷ்தீப், குல்தீப், ராணா, சுந்தர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்..


