News October 5, 2025
கோலி களத்தில் தீயாக இருப்பார்: SKY

ஒரு கேப்டனாக கோலி களத்தில் முழு ஆற்றலுடன் தீயாக இருப்பார் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மற்ற கேப்டன்களை விட கோலி சற்று வித்தியாசமானவர் எனவும், வீரர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்துவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு அழுத்தமான சூழலிலும் கூலாக இருக்க தோனியிடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 5, 2025
‘விஜய் செய்தது தவறு’

கரூர் துயர சம்பவத்தின்போது விஜய் செய்தது தவறு என பிரேமலதா சாடியுள்ளார். கரூருக்கு குறித்த நேரத்திற்கு விஜய் செல்லவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் காத்து கிடக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லாமல் கடமை உணர்வை தவறவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தை அண்ணன் எனக் கூறும் விஜய், அவர் என்ன செய்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என பிரேமலதா காட்டமாக தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
TN அரசுக்கு அஜித் நன்றிக்கடன்

இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை TN அரசு சென்னையில் நடத்தியது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டிற்கே ஊக்கமாக அமைந்ததாக <<17920938>>அஜித்குமார்<<>> தெரிவித்துள்ளார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை (SDAT) கேட்டுப் பெற்று பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்து விளையாட்டுகளுக்கும் SDAT பல நல்ல விஷயங்களை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
தூக்கத்தின் இடையில் இதை செய்யாதீங்க

நள்ளிரவில் தூக்கத்திற்கு இடையே தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும். அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை கருத்தில் கொண்டு, தூக்கத்தின் இடையே தண்ணீர் குடிப்பதை தவிர்த்துவிடுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடித்துவிட்டு படுக்கைக்கு செல்வது சிறந்தது. உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.