News February 24, 2025
PAK அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் 3 முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது பெறாத நிலையில், கோலி தனிப்பட்ட இந்த சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Similar News
News February 24, 2025
புஷ்பா படம் ஸ்டூடண்ட்ஸை கெடுக்குது.. கடுப்பில் பள்ளி HM

‘புஷ்பா’ படம் மாணவர்களை சீரழிப்பதாக ஹைதராபாத் பள்ளியின் HM வருத்தம் தெரிவித்துள்ளார். நாயகனின் தனித்துவமான Mannersim, பேச்சு நடை, செய்கைகளை அப்படியே மாணவர்களை செய்து வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். சமூகத்தை சீரழித்து, மாணவர்களை தவறாக வழிநடத்தும் இது போன்ற படங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி என்ன சொல்றீங்க?
News February 24, 2025
அரசு ஊழியர்கள்: களமிறங்கும் 4 அமைச்சர்கள் குழு

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது.
News February 24, 2025
கர்நாடகா – மகா., இடையே போக்குவரத்து முடக்கம்

கர்நாடகாவின் பெலகாவி, மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருப்பதால் மராத்தி மொழி பேசும் மக்களே அதிகம். பிப்.21ல் இங்கு கர்நாடக அரசு பஸ்ஸில் 14 வயது மராத்தி சிறுமியிடம், கன்னடத்தில் பேசுமாறு கண்டக்டர் கூறியதால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு சித்ரதுர்காவில் மகாராஷ்டிரா அரசு பஸ்ஸூம், புனேவில் கர்நாடக அரசு பஸ்ஸூம் சூறையாடப்பட்டன. இதனால், 2 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது.