News August 4, 2024
புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கோலி

பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில், மேலும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 92 ரன்கள் எடுத்தால் அனைத்துவித போட்டிகளிலும் 27,000 ரன்கள் எடுத்த 4ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இன்று 128 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்கள் எடுக்கும் 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
Similar News
News August 14, 2025
தங்கம் ₹1,440 சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

இறங்கு முகத்தில் இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹1,440 சரிந்துள்ளது. ஆக. 8-ல் ₹75,760-க்கு விற்கப்பட்டு வந்த 1 சவரன், இன்றைய நிலவரப்படி ₹74,320-க்கு விற்பனையாகி வருகிறது. பொதுவாக, ஆடி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. தற்போது, ஆவணி தொடங்க இருப்பதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் இந்த விலை சரிவை பயன்படுத்தி கொள்ளலாம்.
News August 14, 2025
சர்க்கரையை குறைக்க Sugar Diet மட்டும் போதுமா?

நம்மில் பெரும்பாலானோர் ரத்த சர்க்கரை நோய்க்கு ஆளாகாமல் இருக்க Sugar Diet இருப்பதுண்டு. ஆனால் உணவு மட்டுமே சர்க்கரை நோய் வர காரணம் கிடையாது. நாள்பட்ட மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், அதீத உடற்பயிற்சி, ஹார்மோன் மாற்றங்களும் சர்க்கரையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் sugar diet மட்டும் இல்லாமல் இவை அனைத்தையும் நீங்கள் சமாளித்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம்.
News August 14, 2025
வலுப்பெற்ற காற்றழுத்தம்.. 7 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 20-ம் தேதி வரை கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் இன்று மழை பெய்யக்கூடுமாம். உங்க பகுதியில் இப்போ மழையா?