News February 16, 2025
படிதார் RCB கேப்டன் ஆனதற்கு கோலியே காரணம்: கைஃப்

ரஜத் படிதார் RCB கேப்டன் ஆன பின்னணியில் கோலி இருப்பதாக முன்னாள் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார். கோலி கேப்டன் ஆகாதது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தவே விராட் கேப்டன் பொறுப்பை மறுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அணியின் எதிர்காலம் கருதியே படிதார் பெயரை அவர் முன்மொழிந்ததாகவும், ஆனால் இது படிதாருக்கு மிகப்பெரிய சவால் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 1, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.1) 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,440-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹320 குறைந்து ₹99,520-க்கு விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளதால் இன்று தங்கம் வாங்க நினைத்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News January 1, 2026
ராமதாஸ், அன்புமணியை ஒன்று சேர்ப்பேன்: ஜான்பாண்டியன்

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு தான் மிகவும் மன வருத்தப்பட்டதாக ஜான்பாண்டியன் கூறியுள்ளார். ராமதாஸை வன்னியர்களுக்காக போராடிய போராளி என குறிப்பிட்ட அவர், தந்தையும் மகனும் இணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர், இருவரையும் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
இனி வீடுகளில் பணம் வைத்திருக்க கூடாதா? CLARITY

புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் படி, 2026 ஏப்ரல் முதல், வீட்டில் அதிக பணம் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உலாவரும் செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வராது எனவும், முன்பு இருந்த சட்ட நடைமுறைகளை எளிமையாக்குவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளது. அனைவரும் தெரிஞ்சுக்கணும் SHARE THIS.


