News January 10, 2025
யுவராஜ் சிங் கரியர் முடிவுக்கு கோலியே காரணம்: உத்தப்பா

யுவராஜ் சிங் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததற்கு விராட் கோலி தான் காரணம் என ராபின் உத்தப்பா குறை கூறியுள்ளார். கேன்சரில் இருந்து மீண்டுவந்த யுவராஜுக்கு Fitness தேர்வில் எந்த தளர்வும் அளிக்கப்படவில்லை. அவராகவே தேர்வுபெற்றார். எனினும் நுரையீரல் திறன் குறைந்ததாக கூறி, கோலி அவரை வெளியேற்றினார். கேன்சரை வென்றதே பெரிய போராட்டம். ஒரு கேப்டனுக்கு டீமை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம் என்கிறார்.
Similar News
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
News January 18, 2026
RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 18, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 584 ▶குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று ▶பொருள்: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.


