News April 28, 2025
விஜய் சங்கரின் மாஸ் ரெக்கார்டை உடைத்த கோலி!

நடப்பு ஆண்டில் விஜய் சங்கரின் ஒரே சாதனை DC-க்கு எதிராக 43 பந்துகளில் அரைசதம் அடித்தது தான். இதுதான் IPL 2025-ல் மிகவும் மெதுவான அரைசதமாக இருந்தது. மோசமான ரெக்கார்ட் என்றாலும், அவரால் இந்த சீசனில் ஒரே ஆறுதல் ரசிகர்களுக்கு இதுமட்டுமே. ஆனாலும், அதுவும் இருக்கக்கூடாது என கோலி முடிச்சி விட்டார். DC-க்கு எதிரான மேட்சில் அவர் 45 பந்துகளில் அரைசதம் அடித்து விஜய் சங்கரின் ரெக்கார்டை உடைத்து விட்டார்.
Similar News
News January 16, 2026
தான் இசையமைத்த படத்தை விமர்சித்த AR ரகுமான்

ஒரு கலைஞராக, தீய நோக்கங்களுடன் உருவாக்கப்படும் திரைப்படங்களைத் தவிர்க்க முயற்சிப்பதாக AR ரஹ்மான் கூறியுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய சாவா படத்திற்கு அவர் இசையமைத்து பேசுபொருளானது. இந்நிலையில், அது பிரிவினை பேசும் படம் தான். அதனை பேசி தான் பணம் சம்பாதித்தது என ஓபனாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் புத்திசாலிகள், படங்களில் எது உண்மை, எது பொய் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா ஜன நாயகன்?

‘ஜன நாயகன்’ படத்தை ஓடிடியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இது நிச்சயமாக நடக்காது என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. தியேட்டர் வியாபாரம் ₹239 கோடிக்கும், டிஜிட்டல் ரைட்ஸ் ₹120 கோடிக்கும் என தயாரிப்பாளர் வியாபாரம் பேசியிருப்பதால், இந்த தொகையை மொத்தமாக கொடுத்து எந்தவொரு ஓடிடி நிறுவனமும் படத்தை வாங்காது என்கின்றனர். எனவே, நிச்சயமாக தியேட்டரிலேயே படம் ரிலீஸாகுமாம். ஹேப்பியா நண்பா?
News January 16, 2026
பிரபல நடிகை காலமானார்

பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில் காலமானார். சத்யஜித்ரேவின் ‘பிரதித்வந்தி’ படம் மூலம் அறிமுகமான இவர், 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார். திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், லண்டனில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


