News September 4, 2024
சட்டம் அறிவோம்: BNS சட்டம் 279 என்ன சொல்கிறது?

பொது மக்கள் பயன்பாட்டுக்கான நீரூற்று அல்லது நீர்த்தேக்கத்தில் உள்ள நீரை அசுத்தம் செய்வது அல்லது உள்நோக்கத்துடன் சீர்கெட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பாரதிய நியாய சன்ஹிதா BNS சட்டம் 279இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றத்தை செய்யும் நபர்களுக்கு ஆறு மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Similar News
News May 8, 2025
கேது பெயர்ச்சி: பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்

மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.
News May 8, 2025
பஞ்சாப் அணி பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
News May 8, 2025
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.