News November 9, 2024
ஆங்கிலம் அறிவோம்: Chest Thumping என்றால் என்ன?

Chest Thumping என்பதற்கும், ஒப்பாரி வைப்பவர்களுக்கும் தொடர்பில்லை. நெஞ்சு வலி போன்ற சாவின் விளிம்பில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் முதல் உதவியாகவும் இதை நினைத்துவிடாதீர்கள். அப்படியானால் Chest Thumping என்றால் என்ன? Chest Thumping என்ற சொல் தற்பெருமை அடித்துக்கொள்வதை குறிக்கின்றது. இதற்கு சமமான சொற்களாக Bragging, Boasting (தற்பெருமை, வீண் பெருமை பேசுதல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
Similar News
News August 6, 2025
ஆண்களே இந்த பேப்பரை இனி கையில் தொடாதீர்கள்!

ஷாப்பிங் மால், ATM என எங்கு சென்றாலும், பில் போட்டால், கையில் ஒரு சிறிய பேப்பர் தருவாங்க. இந்த குட்டி பேப்பர் ஆண்களுக்கு பெரிய டேஞ்சர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த Thermal paper-ல் BPA (Bisphenol A) என்ற மிகவும் ஆபத்தான கெமிக்கல் உள்ளது. இது ஹார்மோன்களை சீர்குலைத்து பல உடல்நல பிரச்னைகளை உண்டாக்குமாம். இதனால் விந்தணு பாதிப்பும் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது. இனி கொஞ்சம் கவனமா இருங்க!
News August 6, 2025
TN வளர்ச்சியை எல்.முருகனால் தாங்க முடியவில்லை: அப்பாவு

தமிழக அரசு வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு தடைகள் செய்ய முடியுமோ அதனை செய்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு குற்றம் சுமத்தியுள்ளார். தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என எல்.முருகன் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% என்றும், இந்த வளர்ச்சியை தாங்க முடியாமல் அவர்கள் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
News August 6, 2025
சரிவுடன் முடிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிந்து 80,543 புள்ளிகளிலும், நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 24,574 புள்ளிகளிலும் முடிந்தன. Infosys, Wipro, Tech Mahindra, Sun Pharma உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.