News August 28, 2024
ஆங்கிலம் அறிவோம்: Hotel Vs Motel

Hotel பொதுவாக நகரங்கள், சுற்றுலாத் தலங்கள், வணிக மையங்களின் நடுவில் அமைந்திருக்கும். ஆடம்பர அனுபவத்தை வழங்கும் நோக்கில், ஹோட்டல்கள் கட்டப்பட்டிருக்கும். இதனால் இவற்றின் கட்டணம் அதிகமாக இருக்கும். அதே நேரம், நெடுஞ்சாலை ஓரங்களில் Motel கட்டப்படும். லாட்ஜ் என அழைக்கப்படும் மோட்டல்கள், குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி மற்றும் பார்க்கிங் வசதியை வழங்கும். தகவல் பிடித்தால் லைக் பண்ணுங்க.<<-se>>#English<<>>
Similar News
News August 17, 2025
அந்த கூலியும் காலி, இந்த கூலியும் காலி: சீமான்

துப்புரவுப் பணிகளை கூட தனியாரிடம் ஒப்படைத்தால், மாநகராட்சி எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 6 அறிவிப்புகளை வெளியிட்ட CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த நிகழ்வின் இயக்குநர் மேயர் பிரியா என்றும், அதனை அவர் சரியாக இயக்கவில்லை என்றார். ரஜினியின் கூலியும் காலி, மேயர் பிரியா இயக்கிய இந்த கூலியும் காலி என விமர்சித்தார்.
News August 17, 2025
SK-ன் அப்பாவாக 90’ஸ் டாப் ஹீரோ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘மதராஸி’. அதைத்தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் ‘பராசக்தி’
படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் 90-களின் சாக்லேட் பாய் ஹீரோவான அப்பாஸ், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்து வருகிறாராம். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
News August 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 430 ▶குறள்: அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். ▶ பொருள்: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை. அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.