News October 23, 2024

கே.எல். ராகுல் VS சர்பராஸ்.. யாருக்கு அணியில் இடம்?

image

புனே டெஸ்டில் கே.எல். ராகுல், சர்பராஸ் கான் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சுப்மன் கில் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக முதல் டெஸ்டில் விளையாடிய சர்பராஸ் கான், 150 ரன்களை விளாசினார். கே.எல். ராகுல் சாெற்ப ரன்னில் ஆட்டமிழந்த போதிலும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. கில் குணமடைந்து விட்டதால் அவர் அணியில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

Similar News

News November 27, 2025

பாஜகவுக்கு நன்றி கூறிய திருமாவளவன்

image

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், அரசியலமைப்பு குறித்த விவாதம் பேசுபொருளாகியிருக்காது என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் பாஜகவின் ஆட்சி இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கரின் உழைப்பும் தெரிந்திருக்காது என்ற அவர், இதற்காகவே பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். அத்துடன், SIR என்பது பாஜக & ECI-ன் கூட்டுச்சதி என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

News November 27, 2025

சையது முஷ்டாக் அலி கோப்பையில் சாய் சுதர்சன்

image

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகளில், தமிழ்நாடு சீனியர் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மிகப்பெரிய தோல்வியில் முடிந்த SA-க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 14 ரன்களும் மட்டுமே சுதர்சன் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவர் சையது தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

News November 27, 2025

UNESCO தலைமையகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

image

இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரிஸில் உள்ள UNESCO தலைமையகத்தில் டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று PM மோடி நெகிழ்ந்துள்ளார். அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும், மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!