News May 17, 2024

கே.எல்.ராகுல், பூரண் அடுத்தடுத்து அரை சதம்

image

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் கே.எல்.ராகுல், பூரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிரடியாக ஆடிய பூரண் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு 19 பந்துகளில் அரை சதம் கடந்தார். பொறுமையாக ஆடிவந்த கே.எல்.ராகுல் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். தற்போது வரை LSG 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News

News March 6, 2026

விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்

image

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது SM-ல் பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விஜய் ஆளாகியுள்ள நிலையில், நேற்றிரவு முதல் அதிகளவில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. மேலும், தவெக தொண்டர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதையும் காண முடிகிறது. அதேநேரம், <<19309273>>விஜய்க்கு ஆதரவாகவும்<<>> குரல்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்க கருத்து?

News March 6, 2026

தாமிரபரணியை கொலைக் கூடாரமாக்கிய திமுக: நயினார்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 30 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வெளியான செய்தி பதைபதைக்கச் செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தாமிரபரணி நதிக்கரை பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் திமுக அரசின் ஒரே சாதனை என்றும் சாடியுள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சிதைத்த திமுக அரசை மக்கள் நிராகரிப்பர் எனவும் விமர்சித்துள்ளார்.

News March 6, 2026

நாளை 4 மணிநேரம் வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

மாசி மாதமே இன்னும் முடியவில்லை. அதற்குள் வெயில் மண்டையை பிளக்க தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று வெயில் சதமடித்த (100°F) நிலையில், இன்று வேலூர், கரூர் பரமத்தி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதையும் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், இனிவரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதனால், பகல் 11 – மதியம் 3 வரை அவசியமின்றி வெளியே செல்லாதீங்க. உங்க ஊரில் வெயில் எப்படி?

error: Content is protected !!