News October 4, 2025
சோதனையிலும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் கே.எல்.ராகுல் அவுட் ஆனார். இதன்மூலம், ஒரே ஆண்டில் சதம் அடித்ததும் இருமுறை அவுட் ஆன வீரர் என்ற ரெக்கார்டை படைத்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் அவர் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் தோன்றிய 1877 முதல், இதுவரை யாரும் ஒரே ஆண்டில் இருமுறை 100 ரன்னில் அவுட் ஆனது இல்லை.
Similar News
News October 4, 2025
AK-630 ரக வான் துப்பாக்கிகளை வாங்க அரசு திட்டம்

சுதர்சன சக்ரா திட்டத்தின் கீழ், AK-630 ரக வான் துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பொதுத்துறை நிறுவனமான AWEIL உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் 3,000 முறை சுடும் இத்துப்பாக்கியானது, 4 கிமீ தூரம் வரை டிரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை சுட்டு வீழ்த்தும். இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இத்துப்பாக்கிகளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News October 4, 2025
கரூர் துயரம்: முடிவை மாற்றினார் இபிஎஸ்

கரூர் துயரத்தையொட்டி நெடுஞ்சாலை பகுதிகளில் பரப்புரை செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே, நாளை குமாரபாளையம், திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐகோர்ட் தடையை சுட்டிக்காட்டி அவருக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ், உரிய அனுமதியுடன் அக்.8-ல் அங்கு பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
News October 4, 2025
உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், RBI-ன் UDGAM போர்ட்டல் மூலம் சொத்துக்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.