News April 26, 2025
KKR vs PBKS: வெற்றி வாகை சூடப் போவது யார்?

புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திலுள்ள PBKS மற்றும் 7-வது இடத்தில் இருக்கும் KKR ஆகிய அணிகள் இன்றிரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவில் போட்டி நடப்பது KKR அணிக்கு சாதகம். அதேநேரம், PBKS பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. முன்னாள் அணியை ஷ்ரேயஸ் பழிதீர்ப்பாரா?, ரஹானே தலைமையிலான அணி சொந்த மண்ணில் வெல்லுமா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News April 26, 2025
ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு.. மக்கள் ஏமாற்றம்

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்திற்கு பிப். வரை 1.71 கோடி கிலோ கோதுமையை மத்திய அரசு வழங்கியது. தற்போது அதை 85.76 லட்சம் கிலோவாக குறைத்துள்ளது. இதனால் 1,000 அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளுக்கு கூட வெறும் 300 கிலோ கோதுமையே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோதுமை கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News April 26, 2025
சிகரெட்ட விட Danger.. இதனால் 13 வகை கேன்சர் வரலாம்!

சிகரெட், மதுவால், புற்றுநோய் பாதிப்பு வருவது தெரிந்ததே. ஆனால், உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோயை வரும் என்பது தெரியுமா? மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை மற்றும் மெனிங்கியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம். ஆகவே உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள்.
News April 26, 2025
கல்வியை மட்டும் கைவிடக்கூடாது: CM ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு CM ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘நான் முதல்வன்’ பயன் அளித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். கல்வி தான் நமது ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிடக் கூடாது எனவும் CM அறிவுறுத்தினார். மேலும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.