News April 21, 2025
KKR Vs GT: அதிரப்போகும் களம்.. வெற்றி பெறப்போவது யார்?

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் KKR Vs GT அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் KKR-க்கு இப்போட்டி மிக முக்கியமானது. சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், அந்த அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் GT வலுவாக இருப்பதால், இன்றைய போட்டி பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
Similar News
News December 5, 2025
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.
News December 5, 2025
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்த ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து RBI அறிவித்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 5.25% ஆக குறைந்துள்ளது. RBI-ன் இந்த அதிரடி முடிவால் வாடிக்கையாளர்களின் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும். 2024 அக்டோபரில் 6.50% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இந்தாண்டின் இறுதியில் 5.25% ஆக அதாவது 1.25% குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News December 5, 2025
மதுரை மக்களுக்கு இதுதான் வேண்டும்: CM ஸ்டாலின்

மெட்ரோ ரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை தான் மதுரை மக்கள் கேட்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சர்ச்சையை குறிப்பிட்டு பதிவிட்ட அவர், ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …….. அரசியலா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்’ என சூசகமாக மத்திய பாஜக அரசை சாடியுள்ளார். மதுரை மெட்ரோவுக்கான TN அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.


