News May 21, 2024

KKR – SRH அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை

image

2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் KKR – SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் KKR 17 முறையும், SRH 9 முறையும் வென்று இருக்கின்றன. இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 20, 2025

தர்மபுரி மாவட்டத்தில் மின் தடை!

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(நவ.20) பராமரிப்பு பணிகள் காரணமாக மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலம்பட்டி, கிட்டானூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி, கல்லடிப்பட்டி, மருதிப்பட்டி புதூர், கூச்சனூர், மேட்டுவலசை, மூங்கில்பட்டி, மோட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 20, 2025

சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 1 அவுன்ஸ்(28g) $4,000-க்கு கீழ் சென்றது. இதனால், நம்மூர் சந்தையிலும் விலை மளமளவென குறைந்து வந்தது. இதனிடையே, நேற்றும், இன்றும் உயர்வை கண்டுள்ளது. தற்போது $39 உயர்ந்து, $4,105 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், <<18331084>>நேற்று போலவே,<<>> இன்றும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

சிறப்பு TET தேர்வு அறிவிப்பு வாபஸ்

image

SC உத்தரவு படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு 2026 ஜனவரியில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை தனது இணையதளத்தில் இருந்து நீக்கி, TRB வாபஸ் பெற்றுள்ளது. அறிவிப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், அவை களையப்பட்டு, விரைவில் <<18329505>>TET<<>> தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் TRB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!