News March 31, 2025
116 ரன்களில் KKR ஆல்-அவுட்

மும்பைக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் KKR அணி, வெறும் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனால், பேட்டிங் செய்த KKR அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் எடுத்தார். மும்பை பவுலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News January 18, 2026
வம்பிழுத்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சூரி

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரி, DCM உதயநிதிக்கு காளை சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதற்கு நெட்டிசன் ஒருவர், சூரியை திமுகவுடன் இணைத்து, ‘இனி சூரியும் ₹200 கொத்தடிமை. தவெகவை மீறி அடுத்த படம் எப்படி ரிலீஸ் செய்யப்போகிறாரோ?’ என்ற கேலி செய்தார். இதற்கு சூரி, ‘இங்கு கதை தான் கிங், அது நன்றாக இருந்தால் வெற்றி தான்’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
News January 18, 2026
சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி மற்றும் 3-வது ODI போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. நியூசிலாந்து எதிராக ODI தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோற்றதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ODI போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை இந்திய அணி என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
News January 18, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 18, தை 4 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


