News February 10, 2025

Kiss படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

image

கவின் நடித்த Kiss படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள இப்படத்தில், ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். படத்தின் டீசர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Similar News

News March 12, 2026

முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

image

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

News March 12, 2026

சட்டமன்ற தேர்தல்களில் மதிமுக கடந்து வந்த பாதை!

image

1994-ல் திமுகவுக்கு மாற்று என தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் 4 சீட்களுக்கு அடைபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மதிமுக போட்டியிட்ட இடங்களின் விவரம்: *1996 – 177(தனி அணி) *2001 – 211(தனி அணி) *2006 – 35(அதிமுக கூட்டணி) *2011- புறக்கணிப்பு *2016 – 28(மக்கள் நலக்கூட்டணி) *2021 – 6(திமுக கூட்டணி) *<<19357260>>2026 -4(திமுக கூட்டணி)<<>>. மதிமுகவின் எதிர்காலம் பற்றி உங்க கருத்து?

News March 11, 2026

சற்றுமுன்: சீமானுடன் இணைந்தார்

image

2026 தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழருக்கு ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழக சுன்னத் ஜமாத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. நிர்வாகிகளுடன் சேர்ந்து சீமானை நேரில் சந்தித்த கவுன்சிலின் மாநில தலைவர் அக்ரம் கான், 234 தொகுதிகளிலும் NTK வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.

error: Content is protected !!