News March 4, 2025
Whatsappல் வந்த கிஸ் Emoji… மனைவியை கொன்ற கணவன்!

கேரளாவில் பைஜூ(28) வைஷ்ணவி(27) தம்பதியின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர் விஷ்ணு(30). வைஷ்ணவியின் Whatsappக்கு விஷ்ணுவிடமிருந்து கிஸ் எமோஜி வந்துள்ளது. இதனால், கோபமடைந்த பைஜூ இது குறித்து கேட்க, பயத்தில் வைஷ்ணவி விஷ்ணு வீட்டுக்கு ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த, பைஜூ கத்தியால் வைஷ்ணவியை குத்திவிட்டு, விஷ்ணுவையும் கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்து விட, பைஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 4, 2025
CA தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி மாதம் நடந்த CA அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 533 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 21.52% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்திய அளவில் ஐதராபாத் மாணவி முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். முடிவுகளை <
News March 4, 2025
அறநெறி வளர்த்தவர் அய்யா வைகுண்டர்: அண்ணாமலை

அய்யா வைகுண்டரின் 193ஆவது அவதார தினத்தையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவர் அய்யா வைகுண்டர் என குறிப்பிட்டுள்ள அவர், மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, தர்மம் போன்ற அறநெறிகள் வளர்த்தவர் அய்யா வைகுண்டர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News March 4, 2025
20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.