News August 6, 2025

தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய ‘கிங்டம்’ படக்குழு

image

ஈழத் தழிழர்கள் குறித்து தவறாக சித்தரித்ததாக கூறி தமிழகத்தில் ‘கிங்டம்’ படத்தை திரையிட நாதக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் தமிழ் மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என ‘கிங்டம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிங்டமில் இடம்பெற்ற காட்சிகள் கற்பனையானவை மட்டுமே எனவும் மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 6, 2025

உலக சந்தையில் மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்தது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<17317784>>விலை ஜெட் வேகத்தில்<<>> உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று(ஆக.6) சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 16 USD(₹1,403) குறைந்து 3,365 USD-க்கு விற்பனையாகிறது. இதனால், நாளை(ஆக.7) இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கணித்துள்ளனர். எப்படியோ குறைந்தால் சரி..!

News August 6, 2025

விஜய் தேவரகொண்டாவிடம் ED அதிகாரிகள் விசாரணை

image

ஐதராபாத்தில் உள்ள ED அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார். ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக இதே வழக்கில் கடந்த 30-ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜிடம் ED விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

News August 6, 2025

டிரம்புக்கு பதிலடி கொடுத்த RBI கவர்னர்

image

இந்தியப் பொருளாதாரத்தை <<17261037>>‘dead economy’<<>> என்ற டிரம்புக்கு, நமது ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் நடப்பாண்டு GDP வளர்ச்சி 6.5%-மாக இருக்கும் என்ற அவர், IMF கணித்துள்ள உலகப் பொருளாதார வளர்ச்சியான 3%-ஐ விட இது அதிகம் என்றார். மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18%, ஆனால் அமெரிக்கா வெறும் 11% மட்டுமே என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

error: Content is protected !!