News March 2, 2025
‘கிங்’ கோலியின் 300ஆவது ODI போட்டி

IND vs NZ மோதும் இன்றைய போட்டி, விராட் கோலியின் 300ஆவது ODI போட்டியாகும். இதுவரை 299 ODIகளில் விளையாடி, 93 ஸ்டிரைக் ரேட்டில் 14,085 ரன்களை அவர் எடுத்துள்ளார். 51 சதங்கள், 73 அரை சதங்களும் இதில் அடங்கும். சச்சின், சங்ககாராவிற்கு அடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் நீடித்து வருகிறார். சேஸிங்கில் மட்டும் 105 போட்டிகளில் 5,913 ரன்களை விளாசியுள்ளார் இந்த சேஸிங் மாஸ்டர்.
Similar News
News March 12, 2026
அரசு தேர்வு எழுத வந்த நாய்.. வைரல் PHOTO!

பிஹார் நீதிமன்ற பியூன் வேலைக்காக ராகேஷ் குமார், 2022-ல் விண்ணப்பித்துள்ளார். 4 வருட காத்திருப்பிற்கு பிறகு அவருக்கு வந்த ஹால்டிக்கெட்டில், அவரின் போட்டோவிற்கு பதிலாக நாயின் போட்டோ இடம்பெற்றிருந்தது. தேர்வு தேதி நெருங்கி வரும் சூழலில், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ராகேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அலட்சியத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
News March 12, 2026
கேஸ் சிலிண்டர்.. நாடு முழுவதும் புதிய உத்தரவு

கேஸ் சிலிண்டர் பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் விநியோக சூழல் குறித்து காவல்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் இருந்து தலைமைச் செயலர் அறிக்கை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக வதந்தி பரவுவதை தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 12, 2026
தோனி மீதான புகார் தள்ளுபடி

IPL-ல் வீரராக விளையாடும் நிலையில் கிரிக்கெட் அகாடமியையும் நடத்துவதால் BCCI விதிகளை மீறியதாக தோனி மீது 2024-ல் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த BCCI எதிக்ஸ் அதிகாரி நீதிபதி அருண் மிஸ்ரா, அகாடமியில் தோனி நிர்வாக அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், அவர் BCCI விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


