News April 28, 2024
அரை சதம் அடித்தார் கிங் கோலி

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரன் மெஷின் விராட் கோலி அரை சதம் அடித்துள்ளார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 51* ரன்கள் அடித்துள்ளார். தற்போது வரை RCB 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. RCB வெற்றிபெற 103 ரன்கள் தேவை உள்ள நிலையில், கைவசம் இன்னும் 60 பந்துகள் உள்ளது. RCB வெற்றிபெறுமா?
Similar News
News February 6, 2026
BREAKING: பிரபல நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்ட விவகாரம் பேசுபொருளானது. இந்நிலையில், ‘வெள்ளிமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சு கிருஷ்ணாவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் துணை நடிகை நிவேதா உள்ளிட்ட 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News February 5, 2026
விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

வருமான வரித்துறையின் அபராத நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை HC நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது. 2015-ல் வெளியான ‘புலி’ படத்திற்கு பெற்ற வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை ₹1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை HC நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
News February 5, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. இறுதியாக அறிவித்தார்

<<19058035>>அகில இந்திய பார்வர்டு பிளாக்<<>> கட்சியைத் தொடர்ந்து, மருது தேசிய கழகமும் அதிமுகவுடனான கூட்டணியை இன்று உறுதி செய்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருது பாண்டியன், சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடந்துள்ளது.


