News April 11, 2025
போப்பை சந்தித்து நலம் விசாரித்த கிங் சார்லஸ்

உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போப் ஆண்டவர், சமீபத்தில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் சந்தித்தனர். மன்னர் சார்லஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இத்தாலிக்கு வந்தபோது வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்ததாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 18, 2025
தேனி: 10th தகுதி.. தேர்வு இல்லை ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News September 18, 2025
இந்தி திணிப்புக்கு நோ என்ட்ரி: ஸ்டாலின்

அன்று முதல் இன்று வரை ஆதிக்கத்துக்கும், இந்தி திணிப்புக்கும் தமிழ்நாட்டில் நோ என்ட்ரிதான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது எனக் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பை மறந்து EPS ஒருமையில் பேசுவதாக சாடினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹141-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,41,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹2000, இன்று ₹1000 என 2 நாளில் வெள்ளி விலை ₹3000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம் என்பதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.