News April 2, 2024

டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டு கொலை

image

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 1, 2025

RSS-ஐ தடை செய்ய வேண்டும்: கார்கே

image

இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பாஜக – RSS காரணமாகவே உருவாவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார். எனவே, RSS அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI), முஸ்லிம் லீக், Jamiat Ulema-e-Hind ஆகியவற்றின் மொழிகளையே கார்கே பேசுவதாகவும் சாடியுள்ளது.

News November 1, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 1, ஐப்பசி 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News November 1, 2025

வெனிசுலா மீது USA ராணுவ தாக்குதலா?

image

USA-ல் போதைப்பொருள்கள் ஊடுருவுவதற்கு வெனிசுலாவை டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் ஓரிரு நாள்களில் வெனிசுலா மீது ராணுவ தாக்குதல்களை நடத்தும்பொருட்டு, அந்நாட்டு கடல் பகுதிக்கு அருகே USA, தனது படைகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ‘No’ என்று ஒரே சொல்லில் டிரம்ப் மறுத்துள்ளார். கடந்த செப்டம்பரில் கரீபியன் கடலில், போதைப்பொருள் கப்பல் மீது USA தாக்குதல் நடத்தியது.

error: Content is protected !!