News November 9, 2025
Kidney Stone போகணுமா? Roller Coaster-ல போங்க!

பெரிய ரோலர் கோஸ்டர்களில் சவாரி செய்யும்போது 5mm-க்குள் உள்ள கிட்னி கற்கள் வெளியேறுவதாக 2016-ல் மிச்சிகன் ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரோலர் கோஸ்டரின் முன் பக்க இருக்கையில் உட்காருவதால் வெறும் 17% கற்கள் தான் வெளியேற வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் கடைசி சீட்டில் அமரும்போது 64% கற்கள் வெளியேறக்கூடும் என்கின்றனர். புவி ஈர்ப்பு விசையால் இது நடப்பதாக கூறுகின்றனர். SHARE.
Similar News
News November 9, 2025
உங்கள் அக்கவுண்ட்டில் இத முதல்ல மாத்துங்க

சுமார் 2 பில்லியன் கணக்குகள் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈஸியான பாஸ்வேர்டுகளை வைத்துள்ளதாக Comparitech நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ‘123456’ என்ற பாஸ்வேர்டை 76 லட்சம் பேரும், ‘admin’ என 19 லட்சம் பேரும் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த லிஸ்ட்டில், ‘qwerty’, ‘password’, ‘India@123’ போன்ற பாஸ்வேர்டுகளும் இடம்பெற்றுள்ளன. இதை இன்றே மாற்றும்படி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, நவ.15-க்குள் வங்கி கணக்கில் ₹2,000 செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் பணம் கிடைக்க, <
News November 9, 2025
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: 3 ISIS தீவிரவாதிகள் கைது

3 ISIS தீவிரவாதிகளை ஆயுதங்களுடன் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. டாக்டர் அகமது மொஹியுதீன் சையது, முகமது சுஹேல் மற்றும் ஆசாத் சுலேமான் ஷேக் ஆகிய மூவரை கிட்டதட்ட ஓராண்டாக போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இந்தியாவில் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அகமதாபாதில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


