News April 20, 2024

சிறுநீரகத்தைச் சீராக்கும் நெருஞ்சில் ஊறல்

image

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் & நச்சுக்களை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்த (Detox) இளநீர் ஊறலை பருகலாம் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கப்போகும் முன் இளநீரை வெட்டி, அதில் நெருஞ்சில் & வெள்ளரி விதைகளை போட்டு மூடிவிடவும். 12 மணி நேரம் கழித்து, அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்து வந்தால் போதும், உடல்சூடு தணிவதுடன் சிறுநீரகக் கோளாறுகளும் நீங்கும்.

Similar News

News August 14, 2025

சில மணி நேரத்தில் ஆன்லைனில் கசிந்தது ‘கூலி’

image

ரஜினி நடிப்பில் இன்று வெளியாகி தியேட்டர்களை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ள கூலி திரைப்படம், சில மணிநேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்துள்ளது. படத்தின் HD PRINT தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட டோரண்ட் இணையதளங்களில் இலவசமாக டவுன்லோடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஆன்லைனில் வெளியிட 36 இணையதளங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 14, 2025

இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்: IMD

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, தி.மலை, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!

News August 14, 2025

தூய்மை பணியாளர்களுக்கான 6 அறிவிப்புகள்

image

*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.

error: Content is protected !!