News April 14, 2024
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News December 21, 2025
விந்தணு உற்பத்திக்கு தவிர்க்க வேண்டியவை

ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு சில பழக்கங்களை தவிர்த்தாலே போதுமானது. இந்த பழக்கங்களால், விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 20, 2025
உலகை விட்டு மறைந்தார்.. தொடரும் சோகம்

குணச்சித்திர நடிகரான ஸ்ரீனிவாசன் இன்று காலமானார். 2025-ல் ஏராளமான சினிமா பிரபலங்களின் உயிரிழப்பால், திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியது. காலத்தால் அழியாத இவர்களை, சினிமா என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். யாரையெல்லாம், இந்தாண்டில் திரையுலகம் இழந்து வாடுகிறது என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்க?
News December 20, 2025
ரோஹித்தை வெளியில் உட்கார வைக்க மும்பை முடிவு

விஜய் ஹசாரே டிராபி தொடரில் முதல் 2 போட்டிகளில் வெளியில் ரோஹித், ஜெய்ஸ்வால், துபே, ரஹானேவை உட்கார வைக்க மும்பை அணி முடிவு செய்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி பரிசோதிக்கவே இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக, அனைத்து இந்திய அணி வீரர்களும் இந்த தொடரில் விளையாட வேண்டும் என BCCI அறிவுறுத்தி இருந்தது.


