News May 21, 2024
சிம்புவுக்கு ஜோடியாகும் கியாரா, ஜான்வி?

சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூரும் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான ப்ரீ புரடக்ஷன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News August 17, 2025
இன்று கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர் விடுமுறையையொட்டி, நீலகிரிக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சில இடங்களில் 40 – 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
News August 17, 2025
கை தசைகளை பலப்படுத்தும் புஜங்காசனம்!

✦முதுகுவலியை விரட்டவும், முதுகு மற்றும் கை தசைகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
➥தரையில் குப்புறப் படுக்கவும். இரு கைகளையும் தோள்பட்டை நிலைக்கு கொண்டு வந்து, உடல் எடையை உள்ளங்கையில் தாங்கவும்.
➥மூச்சை உள்ளிழுத்து தலையை உயர்த்தி, முதுகை முடிந்தவரை வலைத்து மார்பை முன்னோக்கி நீட்டவும்.
➥இந்த நிலையில் 15- 30 விநாடிகள் வரை இருந்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 17, 2025
ED-யை கண்டு அச்சத்தில் திமுக அமைச்சர்கள்: செல்லூர் ராஜு

திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.